தூத்துக்குடியில் 4 டன் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

தூத்துக்குடியில் 4 டன் இரும்பு பொருட்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-19 18:45 GMT

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த சுமார் 4 டன் இரும்பு பொருட்களை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் தூத்துக்குடி இடையர்காட்டை சேர்ந்த சின்னத்துரை மகன் ராஜா (34) என்பவர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த அன்டோ மகன் ரமேஷ் (38) என்பவர், இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரமேசை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 4 டன் இரும்பு பொருட்களையும் பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்