சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் ஆசாமி
சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் ஆசாமி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வீடுகளின் வாசல்களில் கிடக்கும் செருப்புகள், கடந்த சில நாட்களாக திருடப்பட்டு வந்தது. இந்த திருட்டு தொடர்ந்ததால், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பொதுமக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சுடிதார் அணிந்து ஊருக்குள் நுழையும் மர்ம ஆசாமி ஒருவர், வீடுகளின் வாசல்களில் கிடக்கும் செருப்புகளை திருடுவதும், கண்காணிப்பு கேமரா அருகில் வந்தவுடன் தனது முகத்தை கையால் மூடிக்கொண்டு செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், செருப்பு திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.