புகையிலை பொருட்களை விற்றவர் கைது

புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-24 18:09 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை செய்தனர். அப்போது கோவிந்தபுத்தூர் கீழத்தெருவை சேர்ந்த ராஜீவ் காந்தி (வயது 38) என்பவரது பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப்பொருட்களை கைப்பற்றினர். மேலும் ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்