கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-24 18:57 GMT

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணுழி வடக்கு தெருவைச் சேர்ந்த அன்பரசு(வயது 41) என்பவர், அவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து அன்பரசுவை கைது செய்து, கடையில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்