வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்றவர் கைது

வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்றவர் கைது

Update: 2023-08-06 18:45 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்தவர் ராபி (வயது 49), தொழிலாளி. இவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று ராபியின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ராபியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்