பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது

நாகல்குடி கிராமத்தில் பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது

Update: 2023-02-07 18:45 GMT

ரிஷிவந்தியம்

பகண்டைகூட்டுரோடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோலை தலைமையிலான போலீசார் நேற்று காலை நாகல்குடி பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தடிகாரன் மகன் பீமன்(வயது 55) என்பவர் தனது பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்