தூத்துக்குடியில்மது, கஞ்சா விற்றவர் கைது

தூத்துக்குடியில்மது, கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-06 18:45 GMT

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்த பெருமாள் மகன் முனியசாமி (வயது 40) என்பவர், அந்த பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் முனியசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 மதுபாட்டில்கள், 55 கிராம் கஞ்சா மற்றும் ரூ.8 ஆயிரத்து 300 ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட முனியசாமி மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்பட 18 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்