தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது

ஆரணி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-12 16:19 GMT

ஆரணி

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தனிப்படை) சுந்தரேசன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது நெசல் கிராமத்தில் வேல்முருகன் (வயது 40) என்பவர் நடத்தி வந்த பெட்டி கடையில் இருந்து 792 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை விற்ற வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்