4½ கிலோ புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

4½ கிலோ புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-13 18:54 GMT

புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் அந்த கடையில் வேலாயுதம்பாளையம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் 4½ கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து கடையின் உரிமையாளர் குட்டக்கடை பகுதியை சேர்ந்த சகித் அன்வர் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4,740-ம் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்