கம்பத்தில் லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

கம்பத்தில் லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-01 21:00 GMT

கம்பம் நகருக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் நேற்று கம்பம்மெட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த லாரியில் 12 மூட்டைகளில் 100 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கம்பம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஷாஜகான் (வயது 45) என்பதும், வெளிமாவட்டங்களில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து கம்பம் நகரில் கடைகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாஜகானை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்