கஞ்சா, புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது

ஆலங்குடி அருகேகஞ்சா, புகையிலை பொருட்களை காரில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-29 18:57 GMT

ஆலங்குடி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் காரில் கடத்துவதாக செம்பட்டிவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் இச்சடி-கறம்பக்குடி சாலையில் உள்ள மூக்கம்பட்டி கடைவீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 28 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1 கிலோ கஞ்சா ஆகியவை கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன் புகையிலை பொருட்கள், கஞ்சா, கார் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்