வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர் அருகே கொத்தூர் பகுதியில் வெளிமாநில மது பதுக்கி வைத்து விற்பதாக உமராபாத் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ரீசன்ட் (வயது 60) என்பவர் வெளிமாநில மதுவை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.