600 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்தி வந்தவர் கைது

600 கிலோ ரேஷன் அரிசியை வேனில் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-13 18:42 GMT

புதுக்கோட்டை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் திருவப்பூர் ரெயில்வே கேட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் கீரனூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 600 கிலோ ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த கீழாத்தூரை சேர்ந்த செல்வத்தை (வயது50) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்