வீட்டில் பட்டாசு கடை நடத்தியவர் கைது
தியாகதுருகம் அருகே வீட்டில் பட்டாசு கடை நடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே உள்ள கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் அரசு அனுமதி இன்றி வீ்ட்டில் பட்டாசு கடை நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான போலீசார் மேற்படி கிராமத்துக்கு விரைந்து சென்று சந்தேகத்துக்கிடமான வீடுகளை சோதனை செய்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மகன் சேட்டு என்கிற பிரவின் ராஜ்(வயது 29) என்பவரின் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் ஒரு அறையில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை வைத்து விற்பனைசெய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து பிரவீன்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரம் மதிப்பிலான 76 பட்டாசு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பட்டாசு கடை நடத்திய அறையை பூட்டி சீல் வைத்தனர்.