காதல் திருமணம் செய்தவர் தற்கொலை
காதல் திருமணம் செய்தவர் தற்கொலை செய்து கொண்டார்.;
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியை சேர்ந்தவர் பகவதி மகன் ராமானுஜம் (வயது 34). பெயிண்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வி என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். ராமானுஜம் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராமானுஜத்தை, மாரிச்செல்வி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ராமானுஜம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசில் மாரிச்செல்வி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.