கியாஸ் கசிவு தெரியாமல் கொசுவர்த்தியை பற்ற வைத்தவர் தீயில் கருகி சாவு

மதுரையில் கியாஸ் கசிவு தெரியாமல் கொசுவர்த்தியை பற்ற வைத்தவர் தீயில் கருகி இறந்தார்.;

Update: 2022-12-20 19:34 GMT

மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் ரகுமான் (வயது 50). சம்பவத்தன்று இவரது வீட்டில் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் கியாஸ் பரவி இருந்தது. அதை அறியாமல் வீட்டிற்கு வந்த ரகுமான் கொசுவர்த்தி சுருளை பற்ற வைக்க முயன்றார். அப்போது கியாஸ் தீப்பற்றி அவரது உடலில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரகுமான் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்