புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
திருவண்ணாமலையில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்- இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி மற்றும் போலீசார் திருவண்ணாமலை புது வாணியங்குலத் தெருவில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 29) என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட், பாக்கெட்டுகளாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த சுமார் 24 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.