வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது
ராமநத்தம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது;
ராமநத்தம்
ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் முருகன்(வயது 52). இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று முருகனின் வீட்டை சோதனை செய்தபோது அங்கு 250 மி.லி. கொள்ளளவுள்ள 10 பாலித்தீன் பைகளில் சாரயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து முருகனை கைதுசெய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.