பேரையூர்,
வில்லூர் போலீசார் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர்.
அப்போது ம.புளியங்குளத்தில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அந்த வீட்டில் சோதனை செய்தனர்.
சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 570 பாக்கெட்டுகள் மற்றும் 6 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த பாண்டி (வயது 43) என்பவரை கைது செய்தனர்.