மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
ஆற்காடு அருகே மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு பகுதிகளில் அரசு டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் (வயது 38) என்பவர் வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.