திருத்தணியில் வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது
திருத்தணியில் வீட்டில் குட்கா பதுக்கியவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
திருத்தணி காந்தி ரோடு 2-வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). திருத்தணி கலைஞர் நகர் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் இவர் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் காந்தி ரோடு பகுதியில் உள்ள ராமச்சந்திரன் வீட்டில் சோதனை செய்தனர்.
இதில் 35 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.