7 ஆண்டுகள் மட்டுமே ஏட்டாக பணியாற்றியவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி பெற உரிமை இல்லை

7 ஆண்டுகள் மட்டுமே ஏட்டாக பணியாற்றியவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி பெற உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2023-01-18 18:43 GMT

சென்னை,

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏட்டாக பணியாற்றிய ராமசாமி என்பவர், 25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய தனக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ராமசாமிக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவில், "1979-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணி நியமனம் பெற்ற ராமசாமி, 1997-ம் ஆண்டு முதல் நிலை காவலராகவும், 2002-ம் ஆண்டு தலைமைக் காவலராகவும் (ஏட்டாகவும்) பணியாற்றி 2009-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்று விட்டார்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சத்திகுமார் சுகுமார குருப் ஆகியோர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என ஐகோர்ட்டு முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று தீர்ப்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்