அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்தவர் திடீர் சாவு
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்தவர் திடீர் சாவு
கடலூர்
கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சம்பவத்தன்று 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சத்திஷ்வரன், புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.