நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட வந்தவர் கைது

ஜமுனாமரத்தூர் காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-24 18:45 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே சந்தவாசலில் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில் சந்தவாசல் பிரிவு வனவர் சுப்பிரமணியன், வனக்காப்பாளர் கலையரசி, ராஜ்குமார், சந்திரன் மற்றும் பச்சையப்பன் அடங்கிய குழுவினர் ஜமுனாமரத்தூர் காட்டில் ஆத்துவம்பாடி பீட் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டிற்குள் வெளிச்சம் தெரிவதை பார்த்து, உடனடியாக அங்கு சென்றபோது நாட்டு துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக ஒருவர் அங்கு வந்தார்.

அவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஜமுனாமரத்தூர் தாலுகா, கீழ் குப்சனாவூர் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் தாமோதரனை வேலூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்