விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்தவர் கைது

விற்பனைக்காக காரில் புகையிலை பொருட்கள் கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-17 20:03 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர். இதில் 9 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் தேவமங்கலம் நடுத்தெருவை சேர்ந்த குமாரின் மகன் சிவப்பிரகாஷ்(வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்