கடன் சுமையால் தொழிலாளி தற்கொலை

கடன் சுமையால் தொழிலாளி தற்கொலை

Update: 2022-07-12 12:19 GMT

மடத்துக்குளம்

மடத்துக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (வயது 38). மது குடிக்கும் பழக்கம் உள்ளவர். இவருக்கு கடன் சுமை அதிகரித்த நிலையில் கலந்த பல நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இவருடைய மனைவி மெர்சி ராணி. டெய்லரான இவர் வேலை தேடி சோழமாதேவி சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது மைக்கேல் ராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக மெர்சி ராணி சத்தமிட அருகில் இருந்தவர்கள் வந்து கதவை திறந்து உள்ளே சென்று மைக்கேல் ராஜை மீடடு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மைக்கேல் ராஜை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்