மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி

மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி

Update: 2022-06-21 16:24 GMT

திருப்பூர்

திருவாரூரை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 30). இவரும், தேனி மாவட்டம் அல்லிநகரை சேர்ந்த குமார் (36) என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குமார் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அஞ்சலி, கணவரை விட்டு பிரிந்து ஊத்துக்குளியில் உள்ள தனது சகோதரியுடன் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் குமார், ஊத்துக்குளிக்கு சென்று மனைவியை, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு அஞ்சலி திருப்பூர் பெருமாள் கோவில் பின்புறம் நடந்து சென்றபோது அங்கு வந்த குமார், தன்னுடன் வாழ மறுத்த கோபத்தில், சிறிய கத்தியால் அஞ்சலியின் முதுகு, கைகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். அஞ்சலி சத்தம்போட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அஞ்சலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்