புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-01 18:45 GMT

தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அக்சார் பெயிண்ட் சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி கிழக்கு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் மணிமாறன் (வயது 41) என்பதும், அவர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணிமாறனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள 13 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.38 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்