புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

முன்னீர்பள்ளம் அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-18 19:57 GMT

முன்னீர்பள்ளம்:

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தருவை இந்திரா காலனியை சேர்ந்த பாஸ்கர் (வயது 26) என்பவர் தனது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் பாஸ்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்