புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
பாப்பாக்குடி அருகே புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
முக்கூடல்:
பாப்பாக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் மற்றும் போலீசார் ஓடக்கரை துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மானபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 35) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களையும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 31 கிலோ 200 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும், 55 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.