கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Update: 2023-04-16 12:27 GMT

குண்டடம்

குண்டடத்தை அடுத்துள்ள நந்தவனம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் புதிதாக கிணறு அமைத்து வருகிறார். கிணறு வெட்டும்பணியில் காணிக்கம்பட்டி கரூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில தொழிலாளர்கள் கிணற்றின் அருகிலேயே கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் கூடாரத்தில் தங்கியிருந்த கரூர், பாளையம் அருகே உள்ள ஆனைகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் (வயது 45), என்பவரைக்காணவில்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்து 70அடி ஆழமுள்ள கிணற்றில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தி பார்த்தபோது இறந்த நிலையில் பெருமாள் கிணற்றில் கிடந்தார். இதுபற்றி குண்டடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புதுறையினர் மூலம் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பெருமாள் இரவில் தவறுதலாக கிணற்றுப் பக்கம் சென்று தவறி விழுந்தது இறந்து இருப்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்