தாராபுரம், மூலனூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய மூகமூடி அணிந்த டவுசர் ெகாள்ளையரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம், மூலனூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய மூகமூடி அணிந்த டவுசர் ெகாள்ளையரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-10 13:21 GMT

தாராபுரம், 

தாராபுரம், மூலனூர் பகுதியில் வீடு புகுந்து திருடிய மூகமூடி அணிந்த டவுசர் ெகாள்ளையரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொள்ளை

தாராபுரம், மூலனூர், கொளத்துபாபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, பெண்களை குறித்து நகை பறிப்பது போன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் முதலில் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த 3 டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தேனி மாவட்டம் ஜங்கிள் பட்டியை சேர்ந்த முருகேசன் என்கிற மூசா (வயது 52) என்வரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் உள்பட 3 பேர் முகமூடி அணிந்து, டவுசர் போட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து முருகேசனை ேபாலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 ேபரை பாலீசார் தேடி வருகிறார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்