தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

Update: 2023-06-21 16:39 GMT

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 5-ந் தேதி லட்சுமி மில் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இவரிடம் இருந்து செல்போனை பிடுங்கி கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காரணம்பேட்டையில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியே வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் ஜெயசூரிய கிருஷ்ணன்(23) என்பதும், கார்த்திகேயனிடம் செல்போன் பறித்துசென்றறதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

-----------------

Tags:    

மேலும் செய்திகள்