முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்த சமாதான கூட்டம்

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்த சமாதான கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-24 19:18 GMT

ஆலங்குடி அருகே செரியலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வல்லநாடு மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, செரியலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரு தரப்பினரை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் செரியலூர் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் 4 கிராமங்களிலும் இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட 5 கரைகளிலும் தனித்தனியாக கூட்டம் நடத்தி கரை வாரியாக புதிய நிர்வாகிகளை வருகிற 1-ந்தேதிக்கு முன்பாக தேர்ந்தெடுத்து திருவிழாவை அமைதியான முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு திருவிழாவிற்கு முன்னரோ அல்லது பின்போ கொடிமரம் வைப்பதை உறுதி செய்தும், பின்னர் திருவிழா தேதியை ஏற்கனவே அழைப்பிதழில் உள்ளதை ஏற்பதோ அல்லது புதிதாக முடிவு செய்வதா என்று ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. தற்போது உள்ள வரவு, செலவு கணக்குகளை திருவிழா முடிந்த ஒரு வார காலத்திற்குள் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்