சென்னை விமான நிலையத்தில் புனே செல்ல இருந்த பயணி திடீர் சாவு

சென்னை விமான நிலையத்தில் புனே செல்ல இருந்த பயணி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.

Update: 2022-11-13 07:48 GMT

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (வயது 61). இவர், மங்களூருவில் இருந்து சென்னை வழியாக புனே செல்ல விமானத்தில் சென்னை வந்தார்.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்தில் பயணம் செய்ய காத்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதனை செய்தனர்.

அப்போது கடுமையான மாரடைப்பால் டைட்டல் மேத்தா உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்