ஓடும் பஸ்சில் பயணி திடீர் சாவு

சங்கரன்கோவில் அருகே ஓடும் பஸ்சில் பயணி திடீரென இறந்தார்.;

Update: 2022-11-07 18:45 GMT

சங்கரன்கோவில்:

வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 56). இவருடைய மனைவி பரமேஸ்வரி. ஆதிமூலம் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பஸ்சில் வந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்