நல்லுறவு வளர்க்கும் புத்தாண்டு கொண்டாட்டம்
போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு வளர்க்கும் புத்தாண்டு கொண்டாட்டம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் நடந்தது
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இதில் போலீசார்க்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை வளர்க்கும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து அவர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து மயிலாடுதுறை போலீஸ் குடியிருப்பில் போலீசார் குடும்பங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, போலீசார் குடும்பத்தினர் குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.