குன்றக்குடியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு புதிய கோவில்

குன்றக்குடியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளுக்கு புதிய கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.;

Update: 2023-01-27 19:03 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகில் குன்றக்குடியில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோவில் கட்ட ஆதிதமிழன குயவர்கள் வேளார் நல உரிமை சங்கம் சார்பில் பூமி பூஜை நடைபெற்றது. குன்றக்குடி மேல ரத வீதியில் நேற்று காலை 10 மணி அளவில் ஸ்ரீமாயாண்டி சுவாமிகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மாயாண்டி சுவாமிகளுக்கு கோவில் கட்ட பூமி பூஜை தொடங்கியது.

விழாவிற்கு வந்த அனைவரையும் ஆதி தமிழன குயவர்கள் வேளார் நல உரிமைச்சங்கத்தின் தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயகுமார் பெரியசாமி, பொருளாளர் ஆதிநாராயணன் ஆகியோர் வரவேற்றனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி அதிகாரி ராமமூர்த்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் டெல்லி திருநாவுக்கரசு, பழனியப்பன் உள்ளிட்ட ஆதி தமிழின குயவர்கள் வேளார் நல உரிமைச் சங்கத்தின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சூட்டுக் கோல் மாயாண்டி சுவாமிகளின் பக்தர்கள் கலந்து கொண்டனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்கள். சங்கத்தின் இலவச நகை மதிப்பீட்டாளர்கள் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற 31 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகள் ஆதி தமிழன குயவர்கள் வேளார் நல உரிமைச் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்