போலீஸ் துப்பறியும் பிரிவுக்கு புதிய மோப்ப நாய்
நெல்லை மாநகர போலீஸ் துப்பறியும் பிரிவுக்கு புதிய மோப்ப நாய் வாங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகர போலீஸ் துப்பறியும் பிரிவிற்கு புதிதாக மோப்ப நாய் வாங்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு 'கூப்பர்' என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பெயர் சூட்டினார். நல்ல முறையில் பயிற்சி அளிக்கவும், பராமரிக்கவும் மோப்ப நாய் பிரிவு அலுவலர்களுக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.