ரூ.36 லட்சத்தில் புதிய மின்தடை சாதனம்

ரூ.36 லட்சத்தில் புதிய மின்தடை சாதனத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-11 20:22 GMT

நெல்லை நகர்ப்புற கோட்டம் தியாகராஜநகர் துணை மின்நிலையத்தில், மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி உத்தரவின்பேரில் ரூ.36 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் புதிதாக மின்தடை சாதனம் அமைக்கப்பட்டது. இதனை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி தலைமை தாங்கினார். 55-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் தங்கமுருகன், சங்கர், உதவி மின்பொறியாளர்கள் வெங்கடேஷ், ஜன்னத்துல் சிப்பாயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தியாகராஜநகர் 16-வது மற்றும் 7-வது வடக்கு தெருவில் சுமார் ரூ.8 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் புதிதாக 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டன. இதன்மூலம் சீரான மின்வினியோகம் அந்த பகுதி மக்களுக்கு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்