புதிய மாவட்ட நூலகம் அமைக்க வேண்டும்

மயிலாடுதுறை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே புதிய மாவட்ட நூலகம் அமைக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

Update: 2023-06-06 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.,குத்தாலம் கல்யாணம் நேரில் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென ரூ.6 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட நூலகம் அமைய உள்ளது. இந்த மாவட்ட நூலகம் மயிலாடுதுறை நகர எல்லைக்குள் அமைந்தால்தான் பயன்பாட்டிற்கு ஏதுவாக அமையும். மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தின் அருகில் தற்போது இயங்கி வரும் நூலக இடத்திலேயே புதிய மாவட்ட நூலகத்தை கட்டலாம் அல்லது அந்த நூலகத்திற்கு எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நூலகம் அமைக்கலாம். மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் குருமூர்த்தி உதவி பெறும் பள்ளி அருகில் அல்லது தரங்கம்பாடி சாலையில் சியாமளாதேவி கோவில் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஏதாவது ஓரிடத்தில் புதிய மாவட்ட நூலகம் கட்ட ஏற்பாடு செய்யலாம். எனவே மாவட்டம் முழுவதும் உள்ள வாசகர்களின் போக்குவரத்து வசதியை கருதி புதிதாக அமைய உள்ள மாவட்ட நூலகம் நகராட்சியின் மைய பகுதியில் அமைய ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்