இடையர்காடு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்; ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
இடையர்காடு பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
ஏரல்:
ஏரல் அருகே உள்ள இடையா்காடு பஞ்சாயத்து அலுவலகம் ரூ.23.56 லட்சத்தில் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் புவனா சேகர் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் ஆணையாளர்கள் சுரேஷ், ஆன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் மத்திய தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி, ஏரல் பேரூர் கழகச் செயலாளர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.