ரூ.32 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம்; அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
செழியநல்லூர் ஊராட்சியில் ரூ.32 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
பேட்டை:
நெல்லை அருகே உள்ள மானூர் யூனியனுக்கு உட்பட்ட செழியநல்லூர் ஊராட்சியில் ரூ.32 லட்சம் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, புதிய பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்பழகன், மானூர் ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.