பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிய செயலி

வேதாரண்யம் நகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிய செயலி உருவாக்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-12-27 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிக்க புதிய செயலி உருவாக்கப்படும் என நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானத்தை நகராட்சி அலுவலர் சசிகலா வசித்தார்.கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேதாரண்யம் நகராட்சியில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். மேலும் பன்றிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய செயலி

நகராட்சியில் பொதுமக்களின் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட குறைகள் குறித்து வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க தை மாதம் 1-ந்தேதி முதல் புதிய செயலி உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகராட்சி மேலாளர் ஆனந்த ராஜூலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்