அரசு மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டாளர்கள் குழு ஆய்வு

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-12-12 19:13 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

குழுவினர் ஆய்வு

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தின் போது தாய்- சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறதா, அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு நடத்த மத்திய அரசு லக்சயா தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் லக்சயா தேசிய மதிப்பீட்டாளர்கள் குழுவை சேர்ந்த ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் மேன்ட்ரி ரவிக்குமார் மற்றும் அசாமை சேர்ந்த மருத்துவர் ஜுரி பாரத் கலிடா ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது பிரசவ வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் ரத்த வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கர்ப்பிணிகளிடம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவமனைக்கு நிதி

பின்னர் அவர்கள் கூறுகையில்,

இந்த ஆய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்குறித்த முடிவை நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். மத்திய அரசு கூறியுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைக்கு நிதி வழங்கப்படும்.அதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இ்வ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வின்போது தலைமை மருத்துவர் இளங்கோவன், பிரசவ வார்டு பகுதி தலைமை மருத்துவர் பிச்சை காளியம்மாள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்