காதல் ஜோடி மீது கொலை வெறி தாக்குதல்

விருதுநகர் அருகே காதல் ஜோடி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-08 19:17 GMT

விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 27). இவர் பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியை காதலித்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறுமியின் தந்தையும், அவரது சகோதரனும் சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடி அருகே கருப்பசாமியை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்ததோடு அவருடன் இருந்த சிறுமியையும் தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பற்றி சத்திரரெட்டியபட்டி கிராம நிர்வாக அதிகாரி தமிழ் மணிகண்டன் (39) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்