மலைபோல் குவிந்த கொழிச்சாளை மீன்கள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கொழிச்சாளை மீன்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குளச்சல்:
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கொழிச்சாளை மீன்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குளச்சல் மீன்பிடி துறைமுகம்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஆழ்கடல் பகுதியில் 7 முதல் 15 நாட்கள் வரை தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு கரை திரும்புகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் தொடர் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் மீனவர்கள் இருந்து வந்தனர்.
மலைபோல் குவிந்த கொழிச்சாளை
அதன்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 300 விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பிய வண்ணம் உள்ளன. அந்த விசைப்படகுகளில் டன் கணக்கில் கொழிச்சாளை மீன்கள் பிடிபட்டன. இந்த மீன்களை விற்பனைக்காக மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்தில் மலைபோல் குவித்து வைத்திருந்தனர்.
ஏலக்கூடத்தில் ஏராளமான கொழிச்சாளை மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் விலையும் கணிசமாக குறைந்து காணப்பட்டது.
இந்த மீன்களை வாங்க உள்ளூர் மற்றும் கேரளா வியாபாரிகள் குவிந்தனர். ஒரு கிலோ கொழிச்சாளை மீன் ரூ.20-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.