பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சாவு

சாயல்குடி அருகே பனை மரத்தில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-10 18:45 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (வயது 35). இவர் சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று சாயல்குடியில் இருந்து இருசக்கர வாகனத்தில் எஸ்.தரைக்குடி கிராமத்திற்கு சென்ற போது சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகதாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்