வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது33). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். இதை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திருடி சென்றுள்ளனர். இதை பார்த்த பாலசுப்பிரமணியன் சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து பாலசுப்பிரமணியன், பொதுமக்களுடன் அந்த 3 பேரையும் விரட்டி சென்றார். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை கரியாப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருத்துறைப்பூண்டி தோப்படித்தெருவை சேர்ந்த ஆகாஷ் (18) என்பது தெரியவந்தது. அவருடன் வந்த 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
2 பேருக்கு வலைவீச்சு
இது குறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை கைது ெசய்தனர்.
மேலும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், 3 பேரும் வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.