திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

திருப்போருர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.;

Update: 2023-03-31 09:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகேயுள்ள செண்டிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 35). இவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். பரனூர் சுங்கச்சாவடி அருகே செல்லும்போது முன்னால் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்